Homeசெய்திகள்தமிழ்நாடு"நிவாரணத்தை உயர்த்தி வழங்குக"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“நிவாரணத்தை உயர்த்தி வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திள்ளார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்!

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஏழு நாட்கள் ஆகியும், இன்னும் தண்ணீர் வடியாததால் பல பகுதிகளில் தேங்கிய மழைநீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன. இதனால் கடும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீரை அப்புறப்படுத்த பிற மாவட்டங்களில் உள்ள ராட்சத மோட்டார்களை உடனடியாகக் கொண்டு சென்று தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும்.

நயன்தாராவின் அன்னபூரணி…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நிவாரணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், விளைநிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வாகனங்கள் உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை உரிய முறையில் அகற்றி நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதார பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ