spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

-

- Advertisement -

 

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

we-r-hiring

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (ஏப்ரல் 09) காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்.எம்.வீரப்பன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.

“தங்கர்பச்சான் வெற்றி என்று ஜோதிடம் கூறிய கிளி ஜோதிடர் கைது”- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்- விரிவான தகவல்!

கடந்த 1926- ஆம் ஆண்டு செப்டம்பர் 09- ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டையில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன். அரசியலில் மட்டுமின்றி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார்.

கடந்த 1963- ஆம் ஆண்டு சத்யா மூவிஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார். இதயக்கனி, ரிக்ஷக்காரன், மூன்று முகம், காக்கிச்சட்டை, பாட்ஷா உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற 11ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

ஆர்.எம்.வீரப்பனின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

MUST READ