திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 53 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்புரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம், விமான நிலைய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது உடமைகளை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் தனது உடமைக்குள் ஏராளமான தங்க நகைகளை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடமிருந்து ரூ.1 கோடியே 53 கோடி மதிப்பிலான 2.291 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக பெண் பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.