spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுயானை தாக்கி பாகன் பலி; 10 லட்சம் ரூபாய் நிதி

யானை தாக்கி பாகன் பலி; 10 லட்சம் ரூபாய் நிதி

-

- Advertisement -

யானை தாக்கி உயிரிழந்த பாகனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

முதுமலை சரணாலயத்தில் 14ம் தேதி யானைகள் முகாம் துவக்கம் | Mudumalai  elephants camp start from December 14th | மீண்டும் வந்துடுச்சி 'யானை  வெக்கேஷன்!' - Tamil Oneindia

கடந்த 2019 ஆம் ஆண்டு சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார். பாகனை கொன்ற அந்த யானை, 2019 ஆம் ஆண்டு முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அந்த யானையை பாலன் என்ற பாகன் பராமரித்துவந்தார். இந்நிலையில் இன்று காலை யானைக்கு உணவு அளித்துவிட்டு அழைத்துச் சென்றபோது திடீரென தாக்கியதில் பாலன் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த பாகன் பாலன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

we-r-hiring

இந்நிலையில் பாகன் பாலனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், பாகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், பாகன் பாலனின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

MUST READ