Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

-

சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த எண்ணூர் போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் காவலராக பணியாற்றிவந்த லக்ஷ்மணன் (37) என்பவர் இன்று காலை அம்பத்தூரில் நடைபெறவிருந்த காவல்துறை பயிற்சி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக  மணலி – எண்ணூர் விரைவுச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற கிரேன் மீது மோதிய விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
போக்குவரத்துக் காவலர் லக்ஷ்மணன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
லக்ஷ்மணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ