- Advertisement -
100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி – மின்வாரியம்
அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவசம் மின்சார ரத்து என்ற தகவல் வதந்தி என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுகிறது என்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியமாக வழங்கப்படும்.
மேலும் வீட்டு உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும் எனவும் மின்வாரியம் தெரிவித்திருக்கிறது.