spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!

கராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!

-

- Advertisement -

டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!கராத்தேவில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றவரை பாராட்டி வாழ்த்திய பள்ளி முதல்வர், பயிற்சியாளர்.

we-r-hiring

டெல்லியில் தியாகராஜ் விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பில், 68 வது SGFI தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைச் சார்ந்த கராத்தே வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.கராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!

இதில் கடந்த 8 வருடங்களாக வி கராத்தே பயிற்சி பள்ளியில் இலவசமாக பயிற்சி மேற்கொண்டு வரும்,  திருப்பூர் புது இராமகிருஷ்ண புரம் அரசு பள்ளியில் +2 பயிலும் மாணவி சஸ்மிதா கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார். Under 17 , -56kg பிரிவில் சஸ்மிதா வெண்கலம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கராத்தே போட்டியில் 2 ஆண்டுகளாக பதக்கம் வென்ற சஸ்மிதா மாணவிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு…!கடந்த வருடம் புது டெல்லி சத்ரசால் மைதானத்தில் நடைபெற்ற SGFI தேசிய போட்டியிலும் இவர் வெண்கலம் வென்றுள்ளார். தொடர்ந்து இரண்டு முறை தேசிய போட்டியில் திருப்பூர் அரசு பள்ளி மாணவி மெடல் வென்றுள்ளார்.

வட்டிக்கு மேல் வட்டி இளைஞரின் உயிரை பறித்த தனியார் வங்கி  – பெற்றோர் கதறல்

பதக்கத்துடன் கோவை வந்த வீராங்கமை சஸ்மிதாவை புது இராமகிருஷ்ண புரம் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, வி கராத்தே அகாடமி நிறுவனர் ஷிகான் டாக்டர் லி. விஸ்வநாத், பெற்றோர்கள் உற்சாகமாக விமான நிலையத்தில் வரவேற்று பூங்கொத்துடன் வாழ்த்தினர்.

MUST READ