Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகள் திறப்பு- என்னென்ன செய்ய வேண்டும்?

பள்ளிகள் திறப்பு- என்னென்ன செய்ய வேண்டும்?

-

 

பள்ளி மாணவர்கள்
File Photo

வரும் டிசம்பர் 11- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அதன்படி, “பள்ளி வளாகத்தை முழுமையாகத் தூய்மை செய்து உடைந்த பொருட்கள், கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும், பள்ளி வளாகத்தை முழுமையாகத் தூய்மைச் செய்ய வேண்டும்; முட்புதர்களை அகற்ற வேண்டும், மழையால் சில வகுப்பறை பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பூட்டி மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும், பள்ளி சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை யாரும் செல்லாத படி தடுப்புகள் அமைப்பது அவசியம், சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் யாரும் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும், நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருவதை உறுதி செய்ய வேண்டும், இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின், அவற்றின் அருகே செல்லாதபடி பாதுகாப்பு வேலி அமைப்பது அவசியம்” என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

MUST READ