spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொகுப்பு வீட்டை இடிக்கும் போது இடிந்து விழுந்த மேற்கூரை - 6 பேர் படுகாயம்

தொகுப்பு வீட்டை இடிக்கும் போது இடிந்து விழுந்த மேற்கூரை – 6 பேர் படுகாயம்

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பழைய வீட்டை இடிக்கும் போது, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

we-r-hiring

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் சங்கர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு வீடு பழுதடைந்த நிலையில் தற்போது வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வீட்டை இடிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி , கோவிந்தராஜ் , சதீஷ் குமார், ராஜா, ரஞ்சித் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். வீ ட்டின் மேற்கூரையை இடிக்க முயன்றபோது திடிரென மேற்கூரை முழுவதும் வேலை செய்தவர்கள் மீது விழுந்துள்ளது.

இதில் கோவிந்தராஜ் மற்றும் பெரியதம்பி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இச்சம்பவம் குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ