Homeசெய்திகள்தமிழ்நாடு"பா.ஜ.க. அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“பா.ஜ.க. அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

-

 

"பா.ஜ.க. அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை. தி.மு.க. ஊழல் கட்சி என்ற போலி கருத்தை நிரூபிக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கை தோற்றுப்போகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தங்கம் விலை அதிரடி குறைவு

மக்கள் மத்தியில் பொய் பரப்புரை மேற்கொள்ள புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை ஒரே இடத்தில் அமர வைத்து செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டுள்ளார். அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை செந்தில் பாலாஜி விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். செந்தில் பாலாஜி கைது மூலம் தி.மு.க.வை களங்கப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. பெறக்கூடிய வாக்குகளை சிதறடித்தவர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சியில் தான் தோற்க செந்தில் பாலாஜியே காரணம் என அண்ணாமலை நினைக்கிறார். செந்தில் பாலாஜியை பழிவாங்கும் வேட்கை பா.ஜ.க.வுக்கு அதிகரித்துள்ளது. நோட்டாவை விட நிலைமை மோசமாகி விடும் என்ற பயத்தில் பா.ஜ.க. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் செந்தில் பாலாஜி பணியாற்றினால் பா.ஜ.க. நோட்டாவுக்கு கீழ் சென்று விடும் என பயப்படுகிறது.

“செந்தில் பாலாஜி மீது நடவடிக்கைக் கோரியவர் மு.க.ஸ்டாலின்”- அண்ணாமலை பேட்டி!

தேச நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளை சுய நலனுக்காக பா.ஜ.க. பயன்படுத்துகிறது. பா.ஜ.க. அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாமல் கூடுதல் வேகத்துடன் செயல்படும். எதிர்க்கட்சிகள் மீது களங்கம் ஏற்படுத்துவது மட்டுமே பா.ஜ.க.வின் நோக்கம், குறிக்கோளாக உள்ளது. ஊழல் இல்லாத இந்தியா என்பது வெற்று முழக்கம் என்பதை பா.ஜ.க. நிரூபித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ