spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

 

Senthil balaji

we-r-hiring

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெளியானது ‘லியோ’…ரசிகர்கள் கொண்டாட்டம்!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி, தொடர்ந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.

இதய அறுவைச் சிகிச்சைச் செய்திருப்பதால், உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், ஆதாரங்களை அளித்து விடுவார் என அமலாக்கத்துறைத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

“மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை”- சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

இந்த நிலையில், இன்று (அக்.19) காலை 10.30 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஜெயச்சந்திரன், “மருத்துவக் காரணங்களை ஏற்க முடியாது எனக் கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி” செய்து உத்தரவிட்டுள்ளார்.

MUST READ