spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராகுல்காந்தி குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி கைது

ராகுல்காந்தி குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி கைது

-

- Advertisement -

ராகுல்காந்தி குறித்து அவதூறு- பாஜக நிர்வாகி கைது

ராசிபுரத்தில் அதிகாலை 2 மணி அளவில், பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவின்ராஜ் என்பவரை கரூர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

Image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவர், தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளராக உள்ளார். அவரின் வீட்டில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கரூர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். இவர் தனது X தளத்தில் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி அன்று, “#அன்று தன் தங்கையே தன் கையை உதறும் அளவுக்கு, கீழ் தனமாக நடந்து கொண்ட “அயோக்கியன்” ராகுல்தான். #இன்று flying kiss கொடுக்கும் அளவுக்கு போய் இருக்கான். இவன் கூட்டணில இருந்துட்டு மணிப்பூருக்கு நீதி கேட்குற கருணாநிதிஸ் முதல்ல…..அவன் தங்கைக்கு நீதி கேளுங்கடா” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பிரவீன்ராஜை இன்று அதிகாலை 2 மணிக்கு கரூர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து X தளத்தில், “அதிகாலை 2 மணிக்கு கதவை தட்டி, பிறகு கதவை உடைக்க முற்ப்படும் சிலர். கேட்டால் cyber crime. ஆனால் தான் காமிக்கும் Id card ஐ உள்ளூர் மக்கள் ஃபோட்டோ எடுப்பது குற்றம் என சொல்லி மிரட்டல் . Protocal படி Local போலீஸும் உடன் இல்லை. வீழ்வேன் என நினைத்தாயோ? @mkstalin” என பதிவிட்டுள்ளார். அதிகாலை 2 மணி அளவில் கைது செய்யப்பட்ட சம்பவம், நாமக்கல் பாஜக.,வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ