ஆவடி அருகே தற்கொலைக்கு முயன்ற தாயைக் காப்பாற்றுவதற்காக, வாய் பேச முடியாத மகனும் கிணற்றில் விழுந்துள்ளார்.
புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த லிட்டினம்பள்ளியைச் சேர்ந்த யமுனா என்பவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனைத் தீரவில்லை எனத் தெரிகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட வாய் பேச முடியாத அவரது மகன், ஹரி கிஷோரும் கிணற்றில் குதித்துள்ளார்.
“விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்குச் சென்ற ஆவடி தீயணைப்புத்துறையினர், இருவரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.