ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது.
சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவற்றுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் எண் 06023 சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் அக்டோபர் 16ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06024 போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்டோபர் 17ஆம் தேதி மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு, அன்றிரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மேலும், ரயில் எண் 06033 சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் அக்டோபர் 18ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை போத்தனூரைச் சென்றடையும்.
இதன் மறுமார்க்கத்தில், ரயில் எண் 06034 போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்டோபர் 20ஆம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – செங்கோட்டை இடையிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் எண் 06089 தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில் அக்டோபர் 19ஆம் தேதி இரவு 11.55 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.15 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06090 செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் அக்டோபர் 20ஆம் தேதி மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
ஈரோடு – திருநெல்வேலி சிறப்பு ரயில்
ஈரோடு – திருநெல்வேலி இடையே ரயில் எண் 06145 சிறப்பு ரயில் அக்டோபர் 16ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06146 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் அக்டோபர் 20ஆம் தேதி இரவு 11.40 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 10.30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.
சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில்
கேரளா செல்லும் பயணிகளுக்காக சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் எண் 06083 சென்னை சென்ட்ரல் – கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபர் 19ஆம் தேதி இரவு 11.50 மணிக்குச் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்குக் கொல்லத்தைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06084 கொல்லம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்டோபர் 20ஆம் தேதி மாலை 6.45 மணிக்குக் கொல்லத்திலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 15ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.
