spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷா

50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷா

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கவிஞர் மற்றும் மேடைப்பேச்சாளர் ஆயிஷா இளவட்டக்கல்லை தூக்கி வெற்றி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

we-r-hiring

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இளவட்டக்கல்லை தூக்கும் போட்டி பார்க்கப்படுகிறது. காலம், காலமாக நடத்தப்பட்டு வந்த இந்த போட்டி தற்போதைய காலக்கட்டத்தில் அழிந்து வரும் வீர விளையாட்டாக மாறியுள்ளது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த போட்டி இன்றளவும் நடத்தப்பட்டு தான் வருகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் தென் மாவட்டங்களின் பல்வேறு கிராமப்புறங்களிலும் இன்றளவும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஆண், பெண் என இருதரப்பினருக்கும் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கம் மற்றும் பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கவிஞர் மற்றும் மேடைப்பேச்சாளர் ஆயிஷா இளவட்டக்கல்லை தூக்கி வெற்றி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆயிஷா கலந்துகொண்டார். அவர் 50 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை வெற்றிகரமாக தூக்கி வெற்றி பெற்றார்.

MUST READ