spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

-

- Advertisement -

பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து, திருவண்ணாமலைக்கு  அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 19ம் தேதி திங்கள்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை முதல் ஆகஸ்ட் 20 வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

we-r-hiring

கார்த்திகை தீபத்திருவிழா-திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 130 பேருந்துகளும், நாளை மறுநாள் 250 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாளை 30 பேருந்துகளும், நாளை மறுநாள் மாதாவரத்திலிருந்து தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் 265 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

MUST READ