spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்கள் 22 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 22 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை

-

- Advertisement -

நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டை மீனவர்கள் 22 பேர் 2 விசைப்படகுகளில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி 22 மீனவர்களயும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காங்கேசம் துறைமுகம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

we-r-hiring

அண்மையில் இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ள சம்பவத்திற்கு மீனவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

 

MUST READ