Homeசெய்திகள்தமிழ்நாடுநாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

-

வேதாரண்யம் அருகே  மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சிவசங்கருக்கு சொந்தமான படகில், சிவசங்கர், அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால், தனசேகரன், செல்வகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்படித்துக் கொண்டிருநதபோது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மீனவர்கள் படகில் வைத்திருந்த சுமார் 4 லட்சம் மதிப்பிலான 700 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

மீனவர்களின் வலையை வெட்டிக் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்!
File Photo

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 4 மீனவர்களும், நள்ளிரவு கரை திரும்பி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ