திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர் தாசர்புரம் 3- வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிருபை ஜான் (வயது 58). இவரது மனைவி தீபம் (வயது 55). இருவரும் திருநின்றவூரில் உள்ள தாசர் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 27- ம் தேதி காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு மதிய உணவு இடைவேளையில் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் 60,000 பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது திருநின்றவூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சத்யா (வயது 20) என்பது தெரியவந்தது. அந்த நபரை கைது செய்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த மார்ச் 24- ஆம் தேதி திருநின்றவூர் பகுதியில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக சத்யா கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டுள்ளார். அதே நாளில் அவரது தந்தை திருநின்றவூர் பகுதியில் தனது உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட வாய் தகராறில் அவரை தாக்கி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக சத்யாவின் தந்தை சேகர் அவரும் அன்றே கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
இந்த நிலையில் சிறைக்கு சென்ற சதியா அதன் பின்னர் 3 நாட்களில் ஜாமீனில் வெளி வந்துள்ளார். அப்பொழுது தனது தந்தை கொலை வழக்கில் சிறை சென்றுள்ளதை கேட்டு வருத்தப்பட்டுள்ளார். எனவே தனது தந்தையை எப்படியாவது சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என எண்ணிய சத்யா திருட முயற்சி செய்துள்ளார்.
தாசர்புரம் பகுதியில் நோட்டமிட்ட சத்யா யாரும் இல்லாத ஒரு வீட்டை குறி வைத்துக் கொண்டு வீட்டில் புகுந்து வீட்டில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள்,பணம் ஆகியவற்றை திருடி தப்பி சென்றுள்ளார். மேலும் சத்யா தனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் வீட்டிலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த சத்யாவை திருநின்றவூர் குற்றபிரிவு ஆய்வாளர் சாய் கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை அடிப்படையாக வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த திருநின்றவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!
கைது செய்யப்பட்ட சத்யா மீது பல்வேறு பகுதிகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.