Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி

மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி

-

- Advertisement -
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிட்டார். இவர் 59 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில், வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 37 ஆயிரம் வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட ராம சீனிவாசன் வெறும் 21 ஆயிரம் வாக்குகளே பெற்றார். இதன் மூலம் மதுரை மக்களவை தொகுதிக்கு மீண்டும் எம்பி ஆனார் சு.வெங்கடேசன். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ