கரூர் துயரம்; நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் கைது.
கடந்த மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம், தொடர்பாக வதந்தி பரப்புவோர் மற்றும் அவதூறு கருத்துக்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்கு பதிவு செய்யபப்ட்டு, 3 நபர்கள் கைது செய்யப்பட்டு தொடர் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கண்டனங்கள் முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்தனர்.
இத்தொடர்பாக சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிபதி குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அஸ்தினாபுரம் சசி (எ) சசிகுமார் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், தாங்கள் கூறிய அவதூறு கருத்துகளுக்கு கைது செய்யப்பட்ட மூவரும் மன்னிப்புக்கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மன்னிப்புக்கோரும் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரூர் துயரம் குறித்தோ? நீதிபதி குறித்தோ அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை கையில் முக்கிய சிசிடிவி ஆதாரங்கள்! பஸ்சுக்குள் நடந்தது என்ன? உமாபதி நேர்காணல்!