spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு - முதல்வர் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு – முதல்வர் அறிவிப்பு

-

- Advertisement -

பொங்கல் பரிசு தொகப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளனர்.

we-r-hiring

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சக்கரையுடன் கரும்பும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொது பேசியவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சக்கரையுடன் கரும்பும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் என்று கூறினார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே ஜனவரி இரண்டாம் தேதி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.

நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பொங்கல் பரிசு உடன் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கூடுதலாக ரூபாய் 71 கோடி செலவாகும் என்றும் தெரிவித்தனர்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கரும்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி தெரிவித்துள்ளனர்.

 

MUST READ