Homeசெய்திகள்தமிழ்நாடு34 லட்சம் மாணவர்களுக்கு சூப்பர் காலை உணவு.. விரைவில் சிக்கன் பிரியாணி விருந்து - அமைச்சர்...

34 லட்சம் மாணவர்களுக்கு சூப்பர் காலை உணவு.. விரைவில் சிக்கன் பிரியாணி விருந்து – அமைச்சர் ராஜ்மோகன் ஷாக் நியூஸ்!

-

- Advertisement -

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, முத்தமிழறிஞர் காமராஜர் பெயரிலான காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்குச் சுவையான சிக்கன் பிரியாணி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் உற்சாகமுடன் தெரிவித்தார்.34 லட்சம் மாணவர்களுக்கு சூப்பர் காலை உணவு.. விரைவில் சிக்கன் பிரியாணி விருந்து - அமைச்சர் ராஜ்மோகன் ஷாக் நியூஸ்!

விஸ்தரிக்கப்படும் காமராஜர் காலை உணவுத் திட்டம்: 34 லட்சம் மாணவர்கள் பயன்!

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஏற்கெனவே இத்திட்டத்தின் மூலம் 19,34,230 மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.

we-r-hiring

தற்போதைய இந்தத் திட்ட விரிவாக்கம் மூலம் புதிதாக 15,30,141 மாணவர்கள் இணைக்கப்பட உள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 34,64,371 மாணவர்களுக்கு தினந்தோறும் காலை உணவு கிடைக்கப் போகிறது. மாணவர்களுக்கு முறையான காலை உணவும் ஊட்டச்சத்தும் கிடைப்பதன் மூலமாக, கல்வி வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது” என்றார்.34 லட்சம் மாணவர்களுக்கு சூப்பர் காலை உணவு.. விரைவில் சிக்கன் பிரியாணி விருந்து - அமைச்சர் ராஜ்மோகன் ஷாக் நியூஸ்!

“பள்ளிக் குழந்தைகளுக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” – அமைச்சர் பேட்டி

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்துப் பேசிய அவர், “மாணவர்களுக்குப் பிடித்தமான உணவு, அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. இது குறித்து மாண்புமிகு முதலமைச்சரிடம் நாங்கள் பேசினோம். ஒரே மாதிரியான உணவை வழங்காமல், ஒவ்வொரு நாளும் விதவிதமாய், வித்தியாசமாய் சுவையான காலை உணவு கொடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காகச் சிறப்பு கமிட்டியொன்றை ஆரம்பிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் இருக்கும் கைதி கூட சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார்; அப்படியிருக்கையில் ஏன் பள்ளிக்கூடத்தில் இருக்கும் நம் குழந்தைகள் சிக்கன் பிரியாணி சாப்பிடக் கூடாது என்ற ஆசையும் எண்ணமும் எங்கள் முதல்வருக்கு இருக்கிறது. நிச்சயமாக அதை உடனே செய்துவிட முடியாது; அதை மிகவும் சுகாதாரமான முறையில் செய்ய வேண்டும். அந்த வகையில், நிச்சயமாக இனிவரும் காலங்களில் பள்ளிக் குழந்தைகளுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.34 லட்சம் மாணவர்களுக்கு சூப்பர் காலை உணவு.. விரைவில் சிக்கன் பிரியாணி விருந்து - அமைச்சர் ராஜ்மோகன் ஷாக் நியூஸ்!

இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்

இதற்கிடையே, நவோதயா பள்ளிகள் மற்றும் மொழிவாரி விவகாரங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அன்றும், இன்றும், என்றும் இருமொழிக் கொள்கைதான்; இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கூறியது ஒரு கருத்து மட்டுமே, அது தீர்ப்பு கிடையாது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது; ஆனால், தமிழ்நாட்டு மண்ணுக்கும் மக்களுக்கும் தாய்மொழியாக இருக்கக்கூடிய தமிழில்தான் சிந்திக்க முடியும். எனவே, தமிழக அரசைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை என்பதில் எப்போதுமே உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

மேலும், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தைப் பெருக்கும் வகையில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதோடு, அவர்களின் விருப்பத்திற்கேற்ப சுவையான உணவு வகைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கலங்கடிக்கும் டெங்கு காய்ச்சல் புள்ளிவிவரங்கள்: முதலிடத்தில் சென்னை – உஷாராக இருக்க எச்சரிக்கை!

MUST READ