Homeசெய்திகள்தமிழ்நாடுகலங்கடிக்கும் டெங்கு காய்ச்சல் புள்ளிவிவரங்கள்: முதலிடத்தில் சென்னை - உஷாராக இருக்க எச்சரிக்கை!

கலங்கடிக்கும் டெங்கு காய்ச்சல் புள்ளிவிவரங்கள்: முதலிடத்தில் சென்னை – உஷாராக இருக்க எச்சரிக்கை!

-

- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 18-ஆம் தேதி நிலவரப்படி ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.கலங்கடிக்கும் டெங்கு காய்ச்சல் புள்ளிவிவரங்கள்: முதலிடத்தில் சென்னை - உஷாராக இருக்க எச்சரிக்கை!

புள்ளிவிவரங்கள் காட்டும் பகீர் நிலவரம்

தமிழகத்தில் டெங்கு பரவல் குறித்துச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி:

we-r-hiring
  • மொத்தப் பரிசோதனைகள்: 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 18 வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 2,10,574 பேரிடம் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • பாதிப்பு எண்ணிக்கை: இதில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

  • உயிரிழப்புகள்: முறையான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை டெங்கு பாதிப்பு காரணமாகத் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மாத வாரியான நிலவரத்தின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 3,476 பேருக்கும், செப்டம்பர் 1 முதல் 18 வரை 3,096 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக (செப்டம்பர் 16-ல் 283 பேர், செப்டம்பர் 17-ல் 244 பேர், செப்டம்பர் 18-ல் 253 பேர்) தினசரி பாதிப்பு தொடர்ந்து 250-ஐக் கடந்து வருவது பொதுமக்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

கலங்கடிக்கும் டெங்கு காய்ச்சல் புள்ளிவிவரங்கள்: முதலிடத்தில் சென்னை - உஷாராக இருக்க எச்சரிக்கை!

டெங்கு பாதிப்பில் முதலிடத்தில் சென்னை!

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வந்தாலும், தலைநகர் சென்னையே இதில் முதலிடத்தில் உள்ளது. கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி நிலவரப்படி முக்கிய மாவட்டங்களின் பாதிப்பு விவரம்:

  • சென்னை: 87

  • செங்கல்பட்டு: 25

  • கோயம்புத்தூர் & திருவண்ணாமலை: தலா 11

  • கிருஷ்ணகிரி, சேலம் & திருவள்ளூர்: தலா 10

  • காஞ்சிபுரம்: 9

  • தஞ்சாவூர் &ழுப்புரம்: தலா 7

மாநிலம் முழுவதும் தற்போது 244 டெங்கு உள்நோயாளிகள் சிகிச்சையில் உள்ள நிலையில், காய்ச்சலுக்காக மட்டும் ஒட்டுமொத்தமாக 1,320 உள்நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலங்கடிக்கும் டெங்கு காய்ச்சல் புள்ளிவிவரங்கள்: முதலிடத்தில் சென்னை - உஷாராக இருக்க எச்சரிக்கை!

கொசு ஒழிப்புப் பணியில் 25,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள்

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 25,823 DBC (டெங்கு ஒழிப்பு) பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஊரகப் பகுதிகளில் 13,974 பேரும், நகர்ப்புறப் பகுதிகளில் 11,849 பேரும் தீவிரக் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்களது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், குடிநீர்த் தொட்டிகளை மூடிப் பாதுகாக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் பொதுமக்கள் எவ்வித சுயமருத்துவமும் செய்யாமல், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: ஒரே நாளில் 253 பேருக்குத் தொற்று உறுதி!

MUST READ