குடிநீர் திட்ட டெண்டருக்கு 10% கமிஷன் பெற்றதாகப் புகார்; அவினாசியில் உள்ள V.R. Water Infra அலுவலகத்தில் சோதனை தீவிரமாக்கம்!
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் ‘V.R. Water Infra’ நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை (IT) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

10 சதவீத கமிஷன் புகார்:
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் முக்கியக் குடிநீர் திட்டங்கள் மற்றும் குழாய் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர்களைப் பெறுவதற்காக, 10 சதவீத கமிஷன் லஞ்சமாகக் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த லஞ்சப் பணப் பரிவர்த்தனை மற்றும் கணக்கில் வராத முறைகேடுகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
அவினாசியில் உள்ள அலுவலகத்தில் சோதனை:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொழிலதிபர் வேலுமணி என்பவருக்குச் சொந்தமான V.R. Water Infra நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் குடிநீர் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பெரிய அளவிலான அரசு டெண்டர்களை எடுத்து நடத்தி வருகிறது.
இன்று காலை அவினாசியில் உள்ள வேலுமணியின் வீடு மற்றும் ‘V.R. Water Infra’ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்த சோதனை முகமையினர், கதவுகளைப் பூட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்:
அமைச்சர் கே.என்.நேருவுக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படும் வேலுமணியின் வீட்டில் நடைபெற்று வரும் இந்தச் சோதனையின் போது, கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அரசு குடிநீர் திட்ட டெண்டர் ஆவணங்கள்,
வங்கிப் பரிவர்த்தனை கணக்குகள், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள், குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசுத் துறையின் முக்கிய டெண்டர்களில் 10% கமிஷன் புகார் தொடர்பாக, அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனை, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கே.என். நேருவுக்கு எதிராக அதிரடி! 19 இடங்களில் ஒரே நேரத்தில் DVAC சோதனை – தமிழக அரசியலில் பரபரப்பு
