Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தின் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டது!

தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டது!

-

 

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி மின்நுகர்வு!

தமிழகத்தில் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயிலால் இளநீர், நுங்கு, தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

அதேபோல், ஜூஸ் கடைகள், கரும்பு ஜூஸ் கடைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் சுட்டெரித்து வரும் கடுமையான வெயிலால் வீடுகளில் மின்விசிறி, ஏசி ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் மின் நுகர்வு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!

தமிழகத்தில் மின்சார தேவை நேற்று (ஏப்ரல் 30) 20,701 மெகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழகத்தின் மின் நுகர்வு 454.32 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

MUST READ