spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவியை தொட்டுப் பார்த்து அளவெடுத்த டெய்லர்: வேடிக்கை பார்த்த ஆசிரியரும் போக்சோவில் கைது

மாணவியை தொட்டுப் பார்த்து அளவெடுத்த டெய்லர்: வேடிக்கை பார்த்த ஆசிரியரும் போக்சோவில் கைது

-

- Advertisement -

மதுரையில் மாணவிகளுக்கான சீருடைகளை தைக்கப்பதற்காக, ஆண் டெய்லர்கள் மூலம் கட்டாயபடுத்தி அளவெடுக்க வைத்த  ஆசிரியை மற்றும் 2 டெய்லர்களை மாணவி (10 ஆம் வகுப்பு) அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

 

we-r-hiring

மாணவியை தொட்டுப் பார்த்து அளவெடுத்த டெய்லர்: வேடிக்கை பார்த்த ஆசிரியரும் போக்சோவில் கைது

 

மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.கே.புரம் பகுதியில் உள்ள ”ஸ்ரீ வாணி வித்யாலயா” ( SRI VANI Vidyalaya MATRICULATION) தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக ஆண் டெய்லரை பயன்படுத்தி,  10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அளவு எடுக்க வைத்ததாக மாணவி அளித்த புகாரின் பேரில் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர்  பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை மற்றும் டெய்லரை கைது செய்ய வேண்டும்  என வலியுறுத்தியும் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

பணம் வசூலில் போட்டி… நடுரோட்டில் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கிக் கொண்ட திருநங்கைகள்

 

MUST READ