ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நூறு திருநங்கைகளை கைது செய்த போலீசார். ஆந்திர மாநிலம் நந்தியலாவில் திருநங்கைகளின் பிரிவினர் இடையே பணம் வசூல் செய்வது தொடர்பாக பன்யம் மற்றும் நந்தியால் திருநங்கைகளின் இரு சமூகங்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வருகிறது.
பன்யம் சமூகத்தினர் நந்தியாலில் பணம் வசூலுக்கும் முயற்சிக்கும் அதே நேரத்தில் நந்தியால் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் அதைத் தடுத்து வருகின்றனர். இதனால் இரு பகுதி திருநங்கைகளும் நந்தியாலா கிராமப்புற காவல் நிலையத்திற்கு முன்னால் இரண்டு குழுக்களாக மோதிக்கொண்டனர். இதில் மிளகாய்ப் பொடியைத் தூவியும், ஒருவருக்கொருவர் கற்களை வீசியும் தாக்கி கொண்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி நூறு திருநங்கைகளை கைது செய்தனர்.