Homeசெய்திகள்ஆவடிபோதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்

போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்

-

- Advertisement -

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (POCSO) குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.போதைப் பொருளால் இளைஞர்கள் வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையும் பாதிக்கும் : ஆணையர் சங்கர்

சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் இடையே போதை பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் குற்றங்களை தடுப்பது எப்படி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில்  வெற்றி பெற்ற 70 மாணவ மாணவிகளுக்கு  திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள காவலர் மண்டபத்தில் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர்,  அவர்கள் சான்றிதழ் ,ஷீல்ட் மற்றும் ஊக்கத்தொகை  வழங்கினார்.

குறிப்பாக இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி கல்லூரிகளை மிஞ்சும் அளவில்அரசு பள்ளி மாணவிகள் அதிக அளவில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட இணை ஆணையர் துணை ஆணைய மற்றும் மதுவிலக்கு ஆய்வாளர்கள் துணை ஆய்வாளர்கள் மதுவிலக்கு காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். போதைப்பொருள் விழிப்புணர்வு கட்டுரை போட்டி. தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சிய அரசு பள்ளி மாணவர்கள்,இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவதை நேர்த்தினால் போதைப்பொருள் புழக்கம் தானாக குறையும் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தினார்.

சென்னையை அடுத்த ஆவடி மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 25 காவல் நிலைய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் இடையே போதை பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களை தடுப்பது எப்படி என்ற தலைப்பில் கடந்த 2 மாதங்களாக கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற 70 அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவலர் மண்டபத்தில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், சான்றிதழ் ஷீல்ட் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி, கல்லூரிகளை மிஞ்சும் அளவில் அரசு பள்ளி மாணவிகள் அதிக அளவில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட இணை ஆணையர் துணை ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆவடி காவல் ஆணையர் சங்கர், “போதை பொருள் சில நேரங்களில் மாணவர்கள் இளைஞர்கள் தெரியாமல் இதற்கு அடிமையாக விடுகிறார்கள். அருகாமையில் நண்பர் ஒருவர் போதை பொருள் பயன்படுத்தி அவர் சொல்லி இவர்களும் பயன்படுத்தி அடிமையாகிறார்கள். அதற்கு பிறகு அவர் வாழ்க்கை நரகமாக மாறிவிடுகிறது. அவருடைய வாழ்க்கை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நவீன செல்போன்கள் வந்த பிறகு பழைய பட்டன் போன்கள் யாரும் வாங்குவதில்லை. அதுபோல போதைப் பொருள் தேவையை குறைத்து விட்டால் பயன்பாடு குறைந்து விடும். இளைஞர்கள் போதை பொருளை பயன்படுத்தாமல் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டால் தானாகவே போதைப் பொருள்கள் புழக்கம் குறையும்” என அறிவுரை வழங்கினார்.

2006-இல் தொடங்கி 2024-இல் அங்கீகாரம்! விசிக 5 முறை ஆட்சிக்கு வந்ததற்கு சமம்!  திருமாவளவன் பெருமிதம்!

 

MUST READ