spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடி2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

-

- Advertisement -

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு  தெரிவித்து 2வது நாளாக பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…ஆவடி அருகே வெள்ளனூர் – அலமாதி சாலையில் இயங்கி வரும் தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு  தெரிவித்து நேற்று காலை முதல் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சாலை தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்தால் பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கோரிக்கை வைத்து இந்த போராட்டம் தொடர்கின்றது.2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் இல்லை என்றால் உரிய செட்டில்மெண்ட் வழங்க வேண்டும் என பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த தொழிலாளர் நலத்துறையினர், தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் குழுவினரை இன்று பேச்சு வார்த்தை நடந்த அழைத்துள்ளனர்.

50 சீட்டு – கட்சிக்குள் வேட்டு! எடப்பாடி வாயே திறக்கலயே ஏன்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

MUST READ