spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம்...

ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!

-

- Advertisement -

ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்க்கிமேடு விஷால் நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சாமி வேலு இந்தப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவா் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக வெளியூரு சென்றிருந்த நிலையில் இன்று இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டுக்குள் இருந்த 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரொக்கம் பணம் கொள்ளை போனதை கண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு எண் 100 தகவல் தெரிவித்தாா்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி குற்ற பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீட்டின் சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய சிசிடி காட்சிகளை போலீசாா் ஆய்வு செய்தனா். இது குறித்து கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகள் எந்த திசையில் தப்பித்து சென்றார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பெண்கள் ஓட்டை அள்ளும் திமுக! எடப்பாடியை கதறவிட்ட சர்வே! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

we-r-hiring

MUST READ