Homeசெய்திகள்க்ரைம்கடை வாசலில் நிறத்திய வண்டியால் தகராறு – பெண் தாக்கப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது…

கடை வாசலில் நிறத்திய வண்டியால் தகராறு – பெண் தாக்கப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது…

-

- Advertisement -

கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டியை அகற்றும்படி கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறிய நிலையில், ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் தவெக பகுதி நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் தாக்கப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது…

we-r-hiring

சென்னை மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது பெண், இவர் பார்க் டவுன் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இவரது கடையை மறைக்கும் வகைகில் மீன்பாடி வண்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வண்டியை அகற்றும்படி அந்த பெண் கண்டித்ததாக தெரிகிறது.  அப்போது அங்கு இருந்த, தவெக பகுதி செயலாளர் உதயகுமாரின் சகோதரியான சத்யா என்பவருக்கும் அந்த பெண்ணிற்கும் தகராறு ஏற்பட்டது. “எப்படி வண்டியை நகர்த்த சொல்ல முடியும்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டி செருப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அங்கு வந்த உதயகுமார், அவரது சகோதரர் குமரேசன் ஆகியோர் அந்த பெண்ணை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து பூக்கடை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.  போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தவெக பகுதி செயலாளரான உதயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்திற்கு பின் தப்பி ஓடிய சத்யா மற்றும் குமரேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை!! மூன்று பேர் கைது…

MUST READ