ஆவடியில் வரும் ஆக.2-ஆம் தேதி நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைக்கிறார்.

சுகாதாரத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நலம் காக்கும் ஸ்டாலின் NALAM KAKKUM STALIN -NKS என்கிற சிறப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட இமாக்குலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆவடி செக்போஸ்ட் அருகில் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முன்னிலை வகித்து தொடங்கி வைக்க உள்ளார் .இந்த சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மொத்தம் 17 வகையான ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களை கொண்டு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலன், குழந்தைகள் நலன், இருதய நோய், மூலை நோய், தோல் நோய்,பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், சர்க்கரை நோய் மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட 17 வகையான பிரிவுகளில் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், மேலும் இதர சேவைகளாக ரத்தப் பரிசோதனை, சளி பரிசோதனை இசிஜி, எக்கோ, அல்ட்ராசோலோகிராம் ஆகியவை செயல் படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளை இலவசமாக பெற்று பயனடையலாம்
தூய்மை பணியாளர்கள், 60 வயதிற்கு மேல் முதியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், ரத்த அழுத்த சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள், இடம் புலம் பெயர்ந்த தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான மெடிக்கல் செக்கப், மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வேண்டுபவர்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த மருத்துவ முகாமில் சுமார் 3,000 ரூபாய் மதிப்பிலான ரத்தப் பரிசோதனை இசிஜி, எக்கோ, காசநோய் கண்டறிய எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொண்டு மருத்துவ உதவிகளை பெற்று பயன்பெறுமாறு ஆவடி மாநகராட்சி மாநகர நல அலுவலர் மரு வி. ராஜேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.