spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…

ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…

-

- Advertisement -

ஆவடி பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஆவடி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் உள்ளிட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டு பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தனர்.ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பக்தவத்சலபுரம் பகுதியில் 1.93 ஏக்கா் பரப்பளவில் ஆவடி பேருந்து நிலையம் அமைந்துள்ளது.  இந்த பேருந்து நிலையத்திலிருந்து பெரியபாளையம், ஆரணி, பூந்தமல்லி, கோயம்பேடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் இதன் மூலம் 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோா் பயன் அடைந்து வருகின்றனா்.ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…இத்தகைய முக்கியத்தும் பெற்ற இப்பேருந்து நிலையமானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால், அதனை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோாிக்கை விடுத்த நிலையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்த முடிவு செய்து சட்ட சபையில் அறிவிப்பு விடுத்தும் அதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் 36 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் இரண்டு தளங்களைக் கொண்ட வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த மாதமே தொடங்கப்பட்டுவிட்டன. 19,800 சதுர அடியுடன் கூடிய தரைத்தளத்தில்  200 இருக்கையுடன் காத்திருப்பு கூடம், நேரக்காப்பாளா் பயணச்சீட்டு மையம், ஊழியா்கள் ஓய்வறை, 804 சதுர அடியில் இரண்டு கடைகள், மின் அறை மற்றும் கழிப்பறைகள்  அமைக்கப்பட உள்ளன.ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…

we-r-hiring

முதல் தளத்தில் 19,840 சதுர அடியுடன் 8,638 வணிகப் பகுதி, பணியாளா் அறை, 34 படுக்கையுடன் பணியாளா் ஓய்வறை, பணியாளா் கழிப்பறை, பொதுமக்கள் கழிப்பறையும் அமைய உள்ளன.

18,700 சதுர அடியுடன் கூடிய இரண்டாவது தளத்தில் 11,665 சதுர அடியில் வணிகப்பகுதியும் அமைய உள்ளன.ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…இந்நிலையில், ஆவடி பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஆவடி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிலையில் அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர் உள்ளிட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டு பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைவு!

MUST READ