spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு

-

- Advertisement -

ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்புஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் நீலகண்டன், ஜெயசீலன் இருவரும் 18 ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.நேற்று இரவு ஆடுகள் கட்டி வைத்திருந்த இடத்தில் நாய்கள் நுழைந்து 11 ஆடுகளை கடித்துள்ளது. இதில் ஒன்பது ஆடுகள் இறந்து போன நிலையில், இரண்டு ஆடுகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. சேக்காடு பகுதியில் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ள நிலையில் ஏராளமான நாய்கள் மேய்ந்து திரிவதால் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நீலகண்டன், ஜெயசீலன் இருவரும் ஆடுகளை நாய் கடித்த விவகாரம் குறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர்…

MUST READ