ஆவடி பேருந்து முனையம் ரூ.36 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.புதிய பேருந்து முனைய கட்டுமானப் பணி நடைபெறுவதால் ஆவடி பேருந்து முனையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இத்திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், அதன் சீரமைப்பு பணிகள் நடைபெறும் போது மக்கள் தற்காலிக இடமாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. MTHசாலையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்துக்கு பேருந்து முனையம் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. கட்டுமானப் பணிகள் முடியும் வரை தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தற்காலிக பேருந்து முனையத்தில் மாதாந்திர பயணச்சீட்டு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆவடி பேருந்து நிலைய மறுசீரமைப்பு விவரங்கள்:
மூன்று தளங்கள் கொண்ட பேருந்து நிலையமாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பேருந்து நிலையத்தின் புதுப்பிப்புப் பணிகள் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது, தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த மறுசீரமைப்புடன், பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரியுள்ளனர்.
விக்ரம் ரசிகர்களே அலர்ட் ஆகுங்க…. தயாரிப்பாளர் கொடுத்த அசத்தல் அப்டேட்!
