விக்ரம் நடிக்கும் புதிய படம் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.
சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரமுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி நடிக்கக் கூடியவர். அந்த வகையில் சேது, காசி, பிதாமகன், தங்கலான் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர். எனவே விக்ரமின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் விக்ரம், மடோன் அஸ்வின், பிரேம்குமார், ராம்குமார் பாலகிருஷ்ணன், ராம்குமார் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ‘வீர தீர சூரன்’ படத்திற்கு பின்னர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் தனது 63 வது படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. சியான் 63 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் சியான் விக்ரமின் ரசிகர்கள், சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வாவிடம் சமூக வலைதள பக்கத்தில் விக்ரமின் அடுத்த பட அப்டேட் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அருண் விஷ்வா, “அடுத்த மாதம் கண்டிப்பாக அப்டேட் வரும்” என்று பதில் அளித்துள்ளார். இந்த தகவல் சியான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

மேலும் தயாரிப்பாளர் சொன்ன அந்த அப்டேட் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.