spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபொன்னேரியில் தீண்டாமை தடுப்புச் சுவர்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

பொன்னேரியில் தீண்டாமை தடுப்புச் சுவர்… நடவடிக்கை எடுக்குமா அரசு?

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியில் ஒரு சிலரால் அமைக்கப்பட்டு வரும் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி 15-வார்டுக்கு உட்பட்ட NGO நகர் ஏரிக்கரை பகுதியில் உள்ள கண்ணபிரான் தெருவில் வசிக்கும் பொதுமக்கள், நேற்று பொன்னேரி சார் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தங்கள் பகுதியில் சுமார் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும், இப்பகுதி மக்கள் பொன்னேரி நகராட்சியில் தூய்மைப் பணிகள் மற்றும் பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் கட்டிடத் தொழிலாளர்களாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தங்கள் வீடுகளை கூற்றி வயல் வெளிகளாக இருந்து வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வயல்வெளிகள் எல்லாம் மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த மனைப்பிரிவுகளில் அமைக்கப்பட்ட பல சாலைகள் தாங்கள் குடியிருக்கும் பகுதி வரை செல்லும் நிலையில், அதனையே தாங்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த சாலைகளில் ஒரு சிலர் தடுப்புகளை அமைத்து, தங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் அதனை பயன்படுத்த கூடாது என கூறுவதாகவும், மேலும் ஒருவர் அந்த சாலையின் குறுக்கே ஆக்கிரமித்து சுவர் கட்டும் பணிகளையும் துவக்கி இருக்கிறார் என்று தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். அந்த சாலைகள் அனைத்தும் இதேபோல் தீண்டாமை தடுப்புகள் அமைத்து மறித்துவிட்டால் தாங்கள் அனைவரும் தங்களின் குடியிருக்கும் பகுதியை விட்டு வெளியேவர முடியாத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது என்றும், எனவே அரசு இது குறித்து விசாரித்து, தீண்டாமை தடுப்புகள் மற்றும் சுவர்களை அப்புறப்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

MUST READ