Homeசெய்திகள்தமிழ்நாடு"கோயில் பெயரால் வனம் குப்பைக்காடாகிறது"- நீதிபதி கருத்து!

“கோயில் பெயரால் வனம் குப்பைக்காடாகிறது”- நீதிபதி கருத்து!

-

 

அரிசிக்கொம்பன் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!
File Photo

கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பொறுப்பே இல்லாமல் வானதைக் குப்பைகளாக்கி செல்கிறார்கள் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘லியோ’ பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள சதுரகிரியில் மூன்று நாட்கள் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதி கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி புகழேந்தி, “கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பொறுப்பே இல்லாமல் வனத்தைக் குப்பைகளாக்கிச் செல்கிறார்கள்; கோயிலின் பெயரால் வனத்தைக் குப்பைக்காடாக மாற்றுகிறார்கள். வனப்பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அறநிலையத்துறை அனுமதித்தது எப்படி? வனத்தில் உள்ள கோயில்களில் என்ன நடக்கிறது என நீதிமன்றத்திற்கே நன்றாகவே தெரியும். அன்னதானம் போடுகிறோம்; திருவிழா நடத்துகிறோம் எனக் கூறி பணம் வசூலித்து வனத்தில் குப்பைப் போடுகிறார்கள்” என்றார்.

‘லியோ’ படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் சட்ட விரோதமாக 18 மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

MUST READ