Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து... 15 கார்கள் எரிந்து சேதம்

கோவையில் கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து… 15 கார்கள் எரிந்து சேதம்

-

- Advertisement -

கோவை மாவட்டம் சூலூர் அருகே கார் ஷோரூமில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் திருச்சி சாலையில் ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய கார் விற்பனை மற்றும் பழைய கார்களுக்கு பழுதுநீக்கும் தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை  3 மணி அளவில் ஷோரூமில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. தீ  மளமளவென அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

we-r-hiring

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தண்ணீரை பிய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டனர். அப்போது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி சேதமானது. தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  ஷோரூமுக்குள் நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தி பாதுகாத்தனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ