Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் பிஎஸ்4 இன்ஜின் வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்த விவகாரம்

தமிழகத்தில் பிஎஸ்4 இன்ஜின் வாகனங்கள் முறைகேடாக பதிவு செய்த விவகாரம்

-

- Advertisement -

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பிஎஸ்4 இன்ஜின் வாகனங்களை முறைகேடாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அறிக்கை அடிப்படையில், உள்துறைச் செயலாளர் விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் உத்தரவுப்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு பிஎஸ்4 இன்ஜின் ரக வாகனங்கள் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.

we-r-hiring

இந்நிலையில் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள், பிஎஸ்4 ரக இன்ஜின் பொருத்திய வாகனங்களை உற்பத்தி செய்து தற்போது தேக்க நிலையை அடைந்துள்ளது.

இந்த வாகனங்களை சட்ட விரோதமாக ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புகார்கள் வெளி வந்தன.

குறிப்பாக, ஆர்டிஓ அலுவலகங்களில் அதிர்ஷ்டம் இல்லாத 8 என்ற கூட்டுத்தொகை கொண்ட வாகன எண்களை பதிவு செய்ய மாட்டார்கள் என்ற அடிப்படையில்,  முறைகேடாக Bs4 ரக என்ஜின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளின் விசாரணையில் உறுதியானது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளருக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டு, உள்துறைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உள்துறைச் செயலர் தமிழக டிஜிபி இடம் இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்து துறை விசாரணையின் அடிப்படையில் 399 வாகனங்கள் தமிழகத்தில் மட்டும் பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்களில் முறைகேடாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது போன்ற எத்தனை வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் மற்றும் இந்த முறைகேட்டில் வாகன உற்பத்தியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் முகவர்கள், ஆர்டிஓ உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ