Homeசெய்திகள்தமிழ்நாடுபாசிசத்தின் உச்சம்.. பாஜக மீது அதிமுக பாய்ச்சல்

பாசிசத்தின் உச்சம்.. பாஜக மீது அதிமுக பாய்ச்சல்

-

- Advertisement -

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் வீடியோ விவகாரத்திற்கு பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாசிசத்தின் உச்சம்.. பாஜக மீது அதிமுக பாய்ச்சல்அதிகார மமதையில் ஆளும் பாசிசத்தின் பாஜக அரசு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஒன்றிய நிதியமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்த விதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்னைகளை கோரிக்கையாக முன்வைத்தார்.

அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல். அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!,”இவ்வாறு தெரிவித்துள்ளார். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜக-வை ஏற்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்

MUST READ