spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு

ஆவின் நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு

-

- Advertisement -

தமிழகத்தில் ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெண்ணை விலை உயர்த்தப்பட்டது. தற்போது இரண்டரை ஆண்டு கழித்து மீண்டும் உயர்த்தப்படுகிறது.

we-r-hiring

ரூபாய் 52க்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிராம் வெண்ணெய் தற்போது 55 ரூபாயாக ஆக உயர்ந்தது. ரூபாய் 250க்கு விற்கப்பட்ட அரை கிலோ வெண்ணெய் தற்போது 260 ஆக உயர்வு.

உப்பு வெண்ணெய் 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் வெண்ணெய் 500 கிராம் 250 ரூபாய்க்கு விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வெண்ணெய் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது ஆவின் நிர்வாகம்.

MUST READ