Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விசிக சார்பில் வருகிற 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விசிக சார்பில் வருகிற 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -
kadalkanni

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விசிக சார்பில் வருகிற 24-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24-இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினரை கைது செய்ய வேண்டும் என்ற அவர், இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நேரில் சென்ற அவர், சிகிச்சையில் உள்ளவர்களிடம் ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ரூ.10,000 நிதி உதவி வழங்கினார்.

 

 

MUST READ