

வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? – மனோ தங்கராஜ் கேள்வி
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயர் அப்பாவு, “வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். பிப்ரவரி 19- ஆம் தேதி 2023- 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 20- ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்!
பிப்ரவரி 15- ஆம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். வரும் பிப்ரவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக்கு விடுமுறை ஆகும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும் போது மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும். பல மாநிலங்களில் ஆளுநரையே சட்டப்பேரவைக்கு அழைக்கவில்லை. தமிழகத்தில் நாங்கள் அரசியலமைப்பு, மாண்பை கடைபிடித்து ஆளுநரை அழைத்தோம்” எனத் தெரிவித்தார்.
