திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இமாகுலேட் என்ற தனியார் பள்ளியில் சிறுத்தை புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்த நிலையில் அந்த நேரம் பார்த்து சிறுத்தை பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. சிறுத்தை நுழைந்த தகவலறிந்த உடனே ஆசிரியர்கள் மாணவர்கள் இருக்கும் அறையை உடனடியாக பூட்டினர். இந்த சிறுத்தை தாக்குதலில் முதியவர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பள்ளியில் இருந்து அனைத்து மாணவர்களும் அனைவரும் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.