Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

-

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.50,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.50,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்ததை தொடர்ந்து வெள்ளி விலையானது அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியானது கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81-க்கும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ