Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

-

- Advertisement -

தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.54.560-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலையானது முந்தைய நாள் விலையில் தொடர்ந்து எந்த மாற்றமுமின்றி ஒரு சவரன் ரூ.54.560-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கும் பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்பபட்டு வருகிறது.

MUST READ