spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் காலையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,480-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்கத்தின் மீதான சுங்கவரி 15%லிருந்து 6% குறைந்துள்ளதால் சவரனுக்கு 2080 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51.920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

இந்நிலையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6,430-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி 89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ