Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரையில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மதுரையில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

-

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் இன்று 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய 2 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

schools leave - பள்ளிகளுக்கு விடுமுறை

இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறித்தியுள்ளனர்.

MUST READ